மும்பை அணி சரிந்தது ஏன்: கேப்டன் ரோகித் விளக்கம் | அக்டோபர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது பாதியில் ஒரு அணியாக இணைந்து செயல்படாததால், மும்பை அணியால் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை,’’ என, கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான முதல் பாதியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வி என, 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்தது. எமிரேட்சில் நடந்த 2வது பாதியில் பங்கேற்ற 7 போட்டியில், 3 வெற்றி, 4 தோல்வியை பெற்றது. ஒட்டுமொத்தமாக 14 போட்டியில், 7 வெற்றி, 7 தோல்வியை பெற்ற மும்பை அணி, 14 புள்ளிகளுடன் ‘ரன்–ரேட்’ (0.116) அடிப்படையில் 5வது இடம் பிடித்து ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. கடைசியாக அபுதாபியில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிராக 235 ரன் குவித்த போதும், பவுலிங்கில் சோபிக்காததால் மும்பை அணி 42 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடை பெற்றது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633797022/IPL2021T20CricketMumbaiIndiansPlayOffMissedRohit.html