‘பை–பை’ சொன்னது மும்பை: ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்தது | அக்டோபர் 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் 42 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற மும்பை அணி ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் 171 ரன் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்லலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய மும்பை அணியில் ஜெயந்த் யாதவ், சவுரப் திவாரிக்கு பதிலாக குர்னால் பாண்ட்யா, பியுஸ் சாவ்லா தேர்வாகினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633712832/IPL2021T20CricketMumbaiHyderabadIshanKishanSuryakumarYadav.html