http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ் லீக்’ தொடருக்கான பிரிஸ்பேன் ஹீட் அணியில் இந்திய வீராங்கனை பூணம் யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் வரும் அக். 14ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் விளையாட இந்திய ‘சுழல்’ வீராங்கனை பூணம் யாதவ் 30, ஒப்பந்தமானார். நியூசிலாந்தின் அமெலியா கெர், இத்தொடரில் இருந்து விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தவிர இவர், இத்தொடரில் முதன்முறையாக பங்கேற்க உள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633711757/WomensBigBashLeagueAustraliaT20CricketBrisbaneHeatPoonam.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633711757/WomensBigBashLeagueAustraliaT20CricketBrisbaneHeatPoonam.html