சதம் விளாசினார் ருதுராஜ்: சென்னை அணி ரன் குவிப்பு | அக்டோபர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் சதம் விளாச, சென்னை அணி 20 ஓவரில் 189 ரன் குவித்தது. எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியில் மகிபால் லாம்ரர், லியாம் லிவிங்ஸ்டன், ரியான் பராக், கார்த்திக் தியாகி, கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு ஷிவம் துபே, பிலிப்ஸ், ஆகாஷ் சிங், டேவிட் மில்லர், மயங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டனர். சென்னை அணியில் தீபக் சகார், டுவைன் பிராவோவுக்கு பதிலாக ஆசிப், சாம் கர்ரான் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633194369/IPL2021T20CricketChennaiRajasthanRuturajCentury.html