ஆறுதல் பரிசுதான்; இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இருப்பாரா?- சுனில் கவாஸ்கர் சந்தேகம்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் வழங்கப்படவில்லை. 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் ஜடேஜாவுக்கு மட்டும் கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கினார். டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்காத கோலியின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2XoYpLn