அரைசதம் விளாசினார் மந்தனா: மழையால் ஆட்டம் பாதிப்பு | செப்டம்பர் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய வீராங்கனை மந்தனா அரைசதம் விளாசினார். முதல் நாள் ஆட்டம் கனமழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. கோல்டு கோஸ்ட் நகரில் துவங்கிய இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்திய அணியில் யஸ்திகா பாட்யா, மேக்னா சிங் அறிமுகமாகினர். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேக் லான்னிங், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1633017050/IndiaAustraliaWomenTestCricketDayNightMatchSmritiMandhana.html