http://ifttt.com/images/no_image_card.pngமும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் வெங்கடேஷ், திரிபாதி அரைசதம் விளாச கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணி, இயான் மார்கன் வழிநடத்தும் கோல்கட்டா அணியை சந்தித்தது. கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னைக்கு எதிராக விளையாடாத மும்பை கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பினார். அன்மோல்பிரீத் சிங் நீக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா மீண்டும் தேர்வாகவில்லை. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632414946/IPL2021T20CricketMumbaiKolkataQuintonDekock.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632414946/IPL2021T20CricketMumbaiKolkataQuintonDekock.html