http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் கோஹ்லி. ஐ.பி.எல்., தொடருக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி 32, கடந்த 2011ல் நியமிக்கப்பட்டார். இதுவரை 132 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 60 வெற்றி, 65 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். மூன்று போட்டி ‘டை’ ஆனது. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை. இவரது தலைமையில் ஒரு முறை கூட பெங்களூரு அணி கோப்பை வென்றதில்லை. கடந்த 2016ல் இவரது தலைமையிலான பெங்களூரு அணி பைனல் வரை சென்றிருந்தது. இத்தொடரில் கோஹ்லி, 4 சதம் உட்பட 973 ரன் விளாசினார். இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நடப்பு சீசனுடன் விலகப் போவதாகவும், வீரராக அணியில் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632075972/IPLT20CricketBangaloreCaptainViratKohliStepDown.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632075972/IPLT20CricketBangaloreCaptainViratKohliStepDown.html