யார் புதிய ‘வாத்தியார்’: கும்ளே, லட்சுமணுக்கு வாய்ப்பு | செப்டம்பர் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கும்ளே அல்லது லட்சுமண் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. இவரது பதவிக் காலம் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியுள்ளது. இப்பதவிக்கு ‘சுழல்’ ஜாம்பவான் அனில் கும்ளே 50, அல்லது வி.வி.எஸ். லட்சுமணை 46, நியமிக்க பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ளேவும், ஐதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லட்சுமணும் உள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631983044/IndianCricketHeadCoachRaviShastriRetirementAnilKumbleVVS.html