தேறினார் ரவி சாஸ்திரி | செப்டம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரவி சாஸ்திரி உட்பட மூன்று இந்திய பயிற்சியாளர்கள் கொரோனா தொற்றில் இருந்து தேறினர். இதனால் இவர்கள் விரைவில் தாயகம் திரும்ப உள்ளனர். இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என, முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி, கடந்த செப். 10ல் மான்செஸ்டரில் துவங்க இருந்தது. லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631810977/RaviShastriIndianCricketCoachCoronoPositiveCTScanResult.html