கேப்டனாக நீடிக்கிறார் ரிஷாப் பன்ட்: டில்லி அணி அறிவிப்பு | செப்டம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடில்லி அணியின் கேப்டனாக ரிஷாப் பன்ட் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடருக்கான டில்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் 26, இருந்தார். கடந்த சீசனில் டில்லி அணியை பைனல் வரை அழைத்துச் சென்ற இவருக்கு, மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவரால், இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு பதிலாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட் 23, அணியை வழிநடத்தினார். டில்லி அணி இதுவரை விளையாடிய 8 போட்டியில், 6 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631810829/IPL2021T20CricketDelhiCapitalsCaptainShreyasIyerRishabh.html