பிராவோ அணிக்கு கோப்பை: கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் | செப்டம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகரீபியன் பிரிமியர் லீக் தொடரில் டுவைன் பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. செயின்ட் லுாசியா அணிக்கு எதிரான பைனலில், 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) 9வது சீசன் நடந்தது. செயின்ட் கிட்ஸ் நகரில் நடந்த பைனலில் பிளட்சர் தலைமையிலான செயின்ட் லுாசியா கிங்ஸ் அணி, டுவைன் பிராவோவின் செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த செயின்ட் லுாசியா அணிக்கு கார்ன்வால் (43), ராஸ்டன் சேஸ் (43), கீமோ பால் (39) கைகொடுக்க 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631809406/CaribbeanPremierLeague2021StKittsandNevisPatriotsChampion.html