http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியில் கொரோனா தொற்று பரவலுக்கு, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை குறை சொல்லக் கூடாது,’’ என, பரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என, முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட், செப். 10ல் மான்செஸ்டரில் துவங்க இருந்தது. ஆனால், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், சீனியர் ‘பிஸியோதெரபிஸ்ட்’ நிதின் படேலை தொடர்ந்து, அணியின் ஜூனியர் ‘பிஸியோதெரபிஸ்ட்’ யோகேஷ் பார்மருக்கும் கொரோனா உறுதியானது. கொரோனா அச்சம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்கள் தயங்கினர். பின், இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியை ரத்து செய்தன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631462365/IndiaEngland5thTestCricketCancelledRaviShastriFarokhEngineer.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631462365/IndiaEngland5thTestCricketCancelledRaviShastriFarokhEngineer.html