http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்பதற்காக கோஹ்லி (பெங்களூரு), அஷ்வின் (டில்லி), ரவிந்திர ஜடேஜா (சென்னை), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்) உள்ளிட்ட இந்திய வீரர்கள் துபாய் வந்தடைந்தனர். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள், வரும் செப். 19ல் எமிரேட்சில் துவங்க உள்ளன. சமீபத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது டெஸ்ட், கொரோனா அச்சம் காரணமாக ரத்தானது. இதனையடுத்து மும்பை அணியின் ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் தனிவிமானம் மூலம் அபுதாபி அழைத்துவரப்பட்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631461743/IPL2021T20CricketUAEIndianPlayersAshwinViratKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631461743/IPL2021T20CricketUAEIndianPlayersAshwinViratKohli.html