http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில், காயத்தில் இருந்து மீண்ட குசால் பெரேரா தேர்வானார். ஐ.சி.சி., சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக். 17ல் எமிரேட்ஸ், ஓமனில் துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. இதில், 6 பேட்ஸ்மேன், 5 ‘ஆல்–ரவுண்டர்’, 4 பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் இங்கிலாந்தில் கொரோனா பாதுகாப்பு வளையத்தை மீறியதால் தடை விதிக்கப்பட்ட நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலாகாவுக்கு இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் பெரேரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631461579/ICCT20WorldCupCricketSriLankaSquadKusalPerera.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631461579/ICCT20WorldCupCricketSriLankaSquadKusalPerera.html