மீண்டும் மான்செஸ்டர் டெஸ்ட்: கவாஸ்கர் வரவேற்பு | செப்டம்பர் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த பி.சி.சி.ஐ., முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது,’’ என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என, முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட், செப். 10ல் மான்செஸ்டரில் துவங்க இருந்தது. ஆனால், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், சீனியர் ‘பிஸியோதெரபிஸ்ட்’ நிதின் படேலை தொடர்ந்து, அணியின் ஜூனியர் ‘பிஸியோதெரபிஸ்ட்’ யோகேஷ் பார்மருக்கும் கொரோனா உறுதியானது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631377776/IndiaEnglandManchesterTestCricketReschedulingSunilGavaskar.html