ரவி ராம்பால் தேர்வு: விண்டீஸ் ‘உலக’ அணிக்கு | செப்டம்பர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான விண்டீஸ் அணியில் ரவி ராம்பால் இடம் பிடித்துள்ளார். ஐ.சி.சி., சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. நடப்பு சாம்பியன் விண்டீஸ் சார்பில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சீனியர் வீரர் ரவி ராம்பால் 36, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை 23 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக 2015ல் இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’யில் விளையாடினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631294366/ICCT20WorldCupCricketWestIndiesSquadRaviRampaul.html