ஐ.சி.சி., விருது: பும்ரா பரிந்துரை | செப்டம்பர் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் பும்ரா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்–3’ வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில், சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் அப்ரிதி பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630944170/ICCPlayeroftheMonthAwardCricketJaspritBumrah.html