http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி தாகாவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் (15), ரச்சின் ரவிந்திரா (20), வில் யங் (20) ஆறுதல் தந்தனர். கோலின் டி கிராண்ட்ஹோம் (0), கேப்டன் டாம் லதாம் (5) ஏமாற்றினர். ஹென்ரி நிக்கோல்ஸ் (36*), டாம் பிளன்டெல் (30*) கைகொடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்தது. வங்கதேசம் சார்பில் முகமது சைபுதின் 2 விக்கெட் வீழ்த்தினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630863388/NewZealandBangladeshThirdT20CricketAjazPatel.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630863388/NewZealandBangladeshThirdT20CricketAjazPatel.html