ரோகித் சதம்...இந்தியா ஆதிக்கம்: வலுவான முன்னிலை நோக்கி | செப்டம்பர் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா சதம், புஜாரா அரைசதம் விளாச, இந்திய அணி வலுவான முன்னிலை நோக்கி செல்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 191, இங்கிலாந்து 290 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. ரோகித் (20), ராகுல் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630771232/IndiaEnglandFourthTestCricketOvalGroundLondonRohitSharma.html