http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோஹ்லியை முந்திய ரோகித் 5வது இடம் பிடித்தார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 773 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து முதன்முறையாக 5வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த லீட்ஸ் டெஸ்டின் 2வது இன்னிங்சில் அரைசதம் கடந்த இவர், ‘நம்பர்–1’ இந்திய பேட்ஸ்மேன் ஆனார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, 766 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630512115/ICCTestCricketRankingRohitSharmaViratKohliJoeRoot.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630512115/ICCTestCricketRankingRohitSharmaViratKohliJoeRoot.html