http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தின் ஜோ ரூட், தனது 113வது ரன்னை கடந்த போது டெஸ்ட் அரங்கில் 9000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 117 டெஸ்டில் இந்த இலக்கை அடைந்தார். தவிர, டெஸ்டில் 9 ஆயிரம் ரன் எடுத்த 2வது இங்கிலாந்து, 16வது சர்வதேச வீரரானார். ஏற்கனவே அலெஸ்டர் குக் (12472 ரன்) இந்த ரன்னை கடந்தார். * குறைந்த வயதில் 9 ஆயிரம் ரன்னை எட்டிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சினை (30 ஆண்டு, 253 நாட்கள்) முந்தி 2வது இடம் பிடித்தார் ஜோ ரூட் (30 ஆண்டு, 227 நாட்கள்). முதலிடத்தில் அலெஸ்டர் குக் (30 ஆண்டு, 159 நாட்கள்) உள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628964498/JoeRootEnglandTestCricketRecord9000Runs22Century.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628964498/JoeRootEnglandTestCricketRecord9000Runs22Century.html