பும்ரா ‘நம்பர்–9’: டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் | ஆகஸ்ட் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, 9வது இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 760 புள்ளிகளுடன் 19வது இடத்தில் இருந்து ‘நம்பர்–9’ இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றினார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908 புள்ளி) தொடர்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628695372/ICCTestRankingCricketBumrahKohli.html