ஜோ ரூட் தொடர்ந்து 2-வது சதம்: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இங்கிலாந்து முன்னிலை: வெற்றி பெறுமா கோலி படை?


ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால் லண்டனில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு பெரிய தொந்தரவாகவும்,சவாலாகவும் இருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் அரங்கில் 22-வது சதத்தையும், லார்ட்ஸ் மைதானத்தில் 6-வது சதத்தையும் நிறைவு செய்து 180(18பவுண்டரி) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3singfj