http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., போட்டிக்கு தயாராகும் விதமாக சென்னை அணியினர் துபாயில் பயிற்சியை துவக்கினர். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன், கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 36 போட்டிகள் வரும் செப். 19 முதல் அக். 15 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கவுள்ளன. இதற்காக சமீபத்தில் துபாய் சென்ற தோனி தலைமையிலான சென்னை அணியினர், வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்திக் கொண்டனர். சென்னை அணி, தனது முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியை செப். 19ல் துபாயில் சந்திக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629475783/IPL2021T20CricketChennaiDhoniRainaPracticeDubai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629475783/IPL2021T20CricketChennaiDhoniRainaPracticeDubai.html