http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்,’’ என, காம்பிர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனில், ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை (அக். 17 – நவ. 14) நடக்கவுள்ளது. ‘குரூப்–2’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக். 24ல் சந்திக்கிறது. அதன்பின் நியூசிலாந்து (அக். 31), ஆப்கானிஸ்தான் (நவ. 3), தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் இரு அணிகளை (நவ. 5, 8) எதிர்கொள்கிறது. ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 5 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது, இம்முறையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629391225/ICCT20WorldCupCricketIndiaPakistanGambhir.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629391225/ICCT20WorldCupCricketIndiaPakistanGambhir.html