http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர், கம்மின்ஸ் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவில் நடக்க இருந்த ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது சீசன், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனில் வரும் அக். 17 – நவ. 14ல் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த விண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்காத ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629391097/ICCT20WorldCupCricketAustraliaSquadSteveSmithDavid.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629391097/ICCT20WorldCupCricketAustraliaSquadSteveSmithDavid.html