உதவுமா பெண்கள் ஐ.பி.எல்.,: மந்தனா நம்பிக்கை | ஆகஸ்ட் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபெண்களுக்கான ஐ.பி.எல்., தொடர், சர்வதேச போட்டிகளில் சாதிக்க உதவும்,’’ என, மந்தனா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் கடந்த 2008 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடர் நடத்த கோரிக்கை எழுந்தது. இதற்கு முன்னோட்டமாக 2018ல், 2 அணிகள் மட்டும் பங்கேற்ற பெண்களுக்கான ‘டுவென்டி–20’ சேலஞ்ச் தொடர் நடத்தப்பட்டது. கடந்த 2019ல் 3 அணிகள் விளையாடின. கடந்த ஆண்டு 4 அணிகள், மொத்தம் 7 போட்டிகளில் பங்கேற்க இருந்தன. ஆனால் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629300834/WomenIPLT20CricketSmritiMandhana.html