‘ரூட்’ மாற்றம்...இந்தியா ஏமாற்றம்: லார்ட்ஸ் டெஸ்டில் திருப்பம் | ஆகஸ்ட் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு சாதகமாக இருந்த லார்ட்ஸ் டெஸ்டின் பாதையை, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனக்கு சாதகமாக மாற்றினார். சதம் விளாசி திருப்பம் ஏற்படுத்தினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்திருந்தது. ரூட் (48), பேர்ஸ்டோவ் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628964690/IndiaEngland2ndTestCricketLordsJoeRootCentury.html