http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்னுக்கு சுருண்டது. பவாத் ஆலம் அரைசதம் கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் பட் (11), அபித் அலி (9), அசார் அலி (17) ஏமாற்றினர். கேப்டன் பாபர் ஆசம் (30), முகமது ரிஸ்வான் (23) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய பவாத் ஆலம் (56), பஹீம் அஷ்ரப் (44) கைகொடுக்க முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. விண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர், ஜேடன் சீல்ஸ் தலா 3, கீமர் ரோச் 2 விக்கெட் கைப்பற்றினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628873574/WindiesPakistanFirstTestCricketMohammadAbbas.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628873574/WindiesPakistanFirstTestCricketMohammadAbbas.html