கடைசி ஓவரில் கோவை வெற்றி: நெல்லை அணி ஏமாற்றம் | ஆகஸ்ட் 08, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநெல்லை அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய கோவை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த கோவை அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜு (30), சுரேஷ் குமார் (36) நல்ல துவக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் (0), முகிலேஷ் (6) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கேப்டன் ஷாருக்கான், 29 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 64* ரன் விளாசினார். அபிஷேக் தன்வர் (13) நிலைக்கவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628443696/TamilNaduPremierLeagueTNPLT20CricketKovaiNellai.html