ஆஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’ தோல்வி: தொடரை கைப்பற்றியது வங்கதேசம் | ஆகஸ்ட் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3–0 என, தொடரை கைப்பற்றியது. வங்கதேசம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வங்கதேசம் வென்றது. தாகாவில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த வங்கதேச அணிக்கு முகமது நைம் (1), சவுமியா சர்க்கார் (2) ஏமாற்றினர். சாகிப் அல் ஹசன் (26), அபிப் ஹொசைன் (19) ஆறுதல் தந்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் மகமதுல்லா (52) அரைசதம் கடந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628269462/AustraliaBangladeshThirdT20CricketDhaka.html