சேலத்தை வீழ்த்தியது நெல்லை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்தல் | ஆகஸ்ட் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை அணி தொல்லை எதுவும் இல்லாமல் சேலத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வீழ்த்தியது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நெல்லை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த சேலம் அணிக்கு அக்சய் சீனிவாசன் (2), கேப்டன் கோபிநாத் (3) ஏமாற்றினர். பின் இணைந்த விஜய் சங்கர், அபிஷேக் ஜோடி, நெல்லை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது சஞ்சய் யாதவ் ‘சுழலில்’ அபிஷேக் (25) போல்டானார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628182870/TamilNaduPremierLeagueTNPLT20CricketSalemNellaiVijay.html