http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ போட்டி அரங்கில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம். முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. தாகாவில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. வங்கதேச அணிக்கு சவுமியா சர்க்கார் (2) ஏமாற்றினார். முகமது நைம் (30), சாகிப் அல் ஹசன் (36), கேப்டன் மகமதுல்லா (20), ஆபிப் ஹொசைன் (23) கைகொடுக்க வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 3, ஸ்டார்க் 2 விக்கெட் கைப்பற்றினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628008348/AustraliaT20CricketBangladeshWin.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628008348/AustraliaT20CricketBangladeshWin.html