டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வங்கதேச ஆல்ரவுண்டர் வீரர் திடீர் ஓய்வு: ஜிம்பாப்வே டெஸ்ட்டில் சதம் அடித்து பாதியிலேயே அறிவிப்பு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடந்து வரும்போது, வங்கதேச அணியில் பிரபலமான ஆல்ரவுண்டர் மகமதுல்லா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
ஹராரே நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 468 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் மகமதுல்லா 150 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3AIiXOp