தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலு: டோக்கியோ பாராலிம்பிக்கில் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்துகிறார்

தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டியில் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்த முறை மூவர்ணக்கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தி பெருமை சேர்க்க உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3yjpexI