http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, 5வது இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் (588 புள்ளி), ‘சுழல்’ வீரர் யுவேந்திர சகால் (551) முறையே 16, 21வது இடத்துக்கு முன்னேறினர். இலங்கைக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’யில் புவனேஷ்வர், 4 விக்கெட் சாய்த்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627482373/ICCT20RankingCricketViratKohliBhuvneshwarKumarRohitSharma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627482373/ICCT20RankingCricketViratKohliBhuvneshwarKumarRohitSharma.html