கோஹ்லி ‘நம்பர்–5’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஜூலை 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் ‘டுவென்டி–20’ போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 762 புள்ளிகளுடன் 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (743 புள்ளி), 6வது இடத்துக்கு முன்னேறினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625676528/ICCOneDayandT20RankingCricketViratKohliKL.html