http://ifttt.com/images/no_image_card.pngஅயர்லாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 3–0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. அயர்லாந்து சென்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. பெல்பாஸ்டில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பாவுமா (72), ரீசா ஹென்டிரிக்ஸ் (69), டேவிட் மில்லர் (36*) கைகொடுக்க, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 189 ரன் குவித்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627214420/IrelandSouthAfricaThirdT20CricketBavuma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627214420/IrelandSouthAfricaThirdT20CricketBavuma.html