http://ifttt.com/images/no_image_card.pngபயிற்சி போட்டியின் போது காயமடைந்த இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, கவுன்டி லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. இதில் தமிழக ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர், கவுன்டி அணி சார்பில் விளையாடினார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து வாஷிங்டன் சுந்தரின் கை விரலில் பலமாக தாக்கியதில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. ஐந்து வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள இவர், டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626965359/WashingtonSundarCricketIndiaInjuryPulledOutEnglandTestSeries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626965359/WashingtonSundarCricketIndiaInjuryPulledOutEnglandTestSeries.html