நெல்லை அணி ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் | ஜூலை 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநெல்லைக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய திருச்சி அணி 74 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் திருச்சி, நெல்லை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. திருச்சி அணிக்கு கருணாகரன் முகுந்த் (1), நிதிஷ் ராஜகோபால் (0) ஏமாற்றினர். ஆதித்யா கணேஷ் (33) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய அமித் சாத்விக் (71), அந்தோணி தாஸ் (35*) கைகொடுக்க திருச்சி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626889276/TamilNaduPremierLeagueTNPLT20CricketTrichyNellai.html