http://ifttt.com/images/no_image_card.pngபயிற்சி போட்டியில் இந்திய பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் கவுன்டி அணி 220 ரன் எடுத்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, கவுன்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. செஸ்டர்–லீ–ஸ்ட்ரீட்டில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. பும்ரா (3), சிராஜ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626888794/IndiaCountyPracticeMatchTestCricketSeriesUmeshSiraj.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626888794/IndiaCountyPracticeMatchTestCricketSeriesUmeshSiraj.html