http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் லார்ட்சில் (ஆக. 12–16) நடக்கிறது. இவ்விரு போட்டிக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு பின் துவக்க வீரர் ஹசீப் ஹமீத் வாய்ப்பு பெற்றுள்ளார். தடையில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் தேர்வானார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626881494/IndiaTestSeriesEnglandSquadBenStokesRobinsonHaseepHameed.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626881494/IndiaTestSeriesEnglandSquadBenStokesRobinsonHaseepHameed.html