கோப்பை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் ஏமாற்றம் | ஜூலை 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2–1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (76) நம்பிக்கை தந்தார். கேப்டன் பாபர் ஆசம் (11), முகமது ஹபீஸ் (1) ஏமாற்றினர். பகார் ஜமான் (24) ஆறுதல் தர, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஹித் 4 விக்கெட் வீழ்த்தினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626880710/PakistanT20CricketSeriesEnglandChampion.html