http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் விண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற விண்டீஸ் 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி கிராஸ் ஐலட்டில் நடந்தது. செயின்ட் லுாசியாவில் நடந்தது. தொடை பின்பகுதி காயம் காரணமாக போலார்டுவுக்குப் பதில் நிகோலஸ் பூரன் விண்டீஸ் அணி கேப்டனாக களமிறங்கினார். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. விண்டீஸ் அணிக்கு சிம்மன்ஸ் (30) துவக்கத்தில் கைகொடுத்தார். பிளட்சர் (9), கெய்ல் (13) ஏமாற்றம் தந்தனர். ஹெட்மயர் 36 பந்தில் 61 ரன் எடுத்தார். பின் வரிசையில் பிராவோ (47), ரசல் (24) கைகொடுக்க விண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன் குவித்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626024973/AustraliaWindiesSecondT20Cricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626024973/AustraliaWindiesSecondT20Cricket.html