http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதல் ‘டுவென்டி–20’ இன்று நடக்கிறது. இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கில் சாதிக்கும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்கலாம். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நார்தாம்ப்டனில் இன்று நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஹோவ் (ஜூலை 11), செல்ம்ஸ்போர்டில் (ஜூலை 14) நடக்கவுள்ளன. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் (4, 8 ரன்), ஒருநாள் (1, 19, 16 ரன்) போட்டிகளில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், எழுச்சி காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625760125/IndiaEnglandWomenT20CricketHarmanpreetKaur.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625760125/IndiaEnglandWomenT20CricketHarmanpreetKaur.html