‘டுவென்டி–20’யில் இரட்டை சதம்: டில்லி வீரர் சாதனை | ஜூலை 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடில்லி வீரர் சுபோத், ‘டுவென்டி–20’ போட்டியில் முதன்முறையாக இரட்டை சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார். டில்லியில், கிளப் ‘டுவென்டி–20’ போட்டி நடந்தது. இதில் டில்லி லெவன், சிம்பா அணிகள் மோதின. இதில் டில்லி லெவன் அணி சார்பில் களமிறங்கிய சுபோத் பாட்டீ, 79 பந்தில், 17 சிக்சர், 17 பவுண்டரி உட்பட 205 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ போட்டியில் முதன்முறையாக இரட்டை சதமடித்து புதிய வரலாறு படைத்தார். இவரது ‘ஸ்டிரைக் ரேட்’ 259.49 ஆக உள்ளது. இப்போட்டியில் டில்லி லெவன் அணி 20 ஓவரில் 256 ரன் குவித்தது. ஏற்கனவே இவர், 2018ல் கோவாவில் நடந்த உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் (‘லெதர்’ பந்து) 57 பந்தில், 21 சிக்சர், 13 பவுண்டரி உட்பட 207 ரன் எடுத்ததாக கூறப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625420218/SubodhBhatiDelhiCricketDoubleCenturyinT20Cricket.html