பாகிஸ்தானுக்கு பதிலடி: இங்கிலாந்து வெற்றி | ஜூலை 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான 2வது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி தந்தது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி லீட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (10), டேவிட் மலான் (1) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 39 பந்தில் 59 ரன் (2 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்தார். மொயீன் அலி (36), லியாம் லிவிங்ஸ்டன் (38) ஓரளவு கைகொடுத்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626629631/PakistanEnglandSecondT20CricketJosButler.html