இஷான் கிஷான், சூர்யகுமார் அறிமுகம் | ஜூலை 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகினர். இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் என, இருவர் அறிமுகமாகினர். இதில் பிறந்த நாளன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமான 2வது இந்திய வீரரானார் இஷான் கிஷான் 23. இதற்கு முன், குருசரண் சிங் (1990, எதிர்: ஆஸி., இடம்: ஹாமில்டன்) தனது 27வது பிறந்த நாளன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இஷான் கிஷானுக்கு கேப்டன் ஷிகர் தவான், சூர்யகுமாருக்கு துணை கேப்டன் புவனேஷ்வர் குமார், ஒருநாள் போட்டிக்கான பிரத்யேக தொப்பி வழங்கினர். சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியிலும் இஷான் கிஷான்–சூர்யகுமார் ஒரே நாளில் (2021, மார்ச் 14, எதிர்: இங்கிலாந்து, இடம்: ஆமதாபாத்) அறிமுகமாகினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626629183/IshanKishanSuryakumarYadavIndiaCricketersSriLankaSeriesDebut.html