ஷிகர் தவான் ‘நம்பர்–16’: ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம் | ஜூலை 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்னுக்கான தரவரிசையில் இந்தியாவின் தவான் 16வது இடத்துக்கு முன்னேறினார். ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், 712 புள்ளிகளுடன் 18வது இடத்தில் இருந்து 16வது இடத்துக்கு முன்னேறினார். இவர், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 86 ரன் விளாசினார். முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (873 புள்ளி), இந்தியாவின் விராத் கோஹ்லி (848), ரோகித் சர்மா (817) நீடிக்கின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626889566/ICCOneDayCricketRankingShikharDhawanViratKohliYuzvendra.html